போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுத் திட்டம் இன்று வடமேல் மாகாணத்தில்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுத் திட்டம் இன்று வடமேல் மாகாணத்தில்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுத் திட்டம் இன்று வடமேல் மாகாணத்தில்

எழுத்தாளர் Bella Dalima

25 Jul, 2015 | 9:57 am

சக்தி, சிரச, நியூஸ்பெஸ்ட் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இணைந்து முன்னெடுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுத் திட்டத்தின் ஐந்தாவது கட்டம் இன்று வடமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 12 பகுதிகளில் உள்ள வீடுகள் தோறும் சென்று எமது குழுவினர் இன்றும் நாளையும் விழிப்புணர்வை வழங்கவுள்ளனர்.

போதைப்பொருள் நாட்டிற்கும் வீட்டிற்கும் உங்களுக்கும் வேண்டாம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த செயற்றிட்டம் ஏற்கனவே வடக்கு, தென், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டன.

புத்தளம் மாவட்டத்திற்கான விழிப்புணர்வுத் திட்டம் இன்று காலை சிலாபம் முன்னேஸ்வரத்தில் ஆரம்பமானது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்