தேர்தல் சட்ட மீறல்கள்: கொழும்பில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்ட மீறல்கள்: கொழும்பில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்ட மீறல்கள்: கொழும்பில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

25 Jul, 2015 | 11:58 am

பொதுத்தேர்தல் தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்திலிருந்து இதுவரை 78 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்துள்ளன.

இதனைத் தவிர பதுளை மாவட்டத்தில் 36 முறைப்பாடுகளும் ஹம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தலா 27 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

பாராளுமன்ற தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் செயலகத்திற்கு மொத்தமாக 507 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சட்டவிரோதமாக நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டமை தொடர்பில் அதிகப்படியாக 142 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தவிர சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் 102 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்