சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட எள்ளுக்காடு சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்

சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட எள்ளுக்காடு சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்

சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட எள்ளுக்காடு சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

25 Jul, 2015 | 5:29 pm

கிளிநொச்சி எள்ளுக்காடு பகுதியில் அண்மையில் உருக்குலைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அச்சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த சிறுவன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான 14 வயது சிறுவனிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவரைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவு நேற்று (24) பெறப்பட்டது.

இதன்பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமையை சிறுவன் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், சட்ட மருத்துவ அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிறுமியுடையது என சந்தேகிக்கப்படும் எச்சங்கள் கடந்த 19 ஆம் திகதி பிற்பகல் எள்ளுக்காடு பகுதியில் உள்ள வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி சிறுமி காணாமற்போயிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்