சக்தியின் க்ளோபல் சுப்பர் ஸ்டாராக பிரவீனா வாகை சூடினார் 

சக்தியின் க்ளோபல் சுப்பர் ஸ்டாராக பிரவீனா வாகை சூடினார் 

சக்தியின் க்ளோபல் சுப்பர் ஸ்டாராக பிரவீனா வாகை சூடினார் 

எழுத்தாளர் Bella Dalima

25 Jul, 2015 | 11:08 pm

சக்தியின் க்ளோபல் சுப்பர் ஸ்டாராக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி  போட்டியில் கலந்து கொண்ட பிரவீனா தெரிவாகியுள்ளார்.

இரண்டாவது இடத்தை மலேஷியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஷாஷ்டனும்  மூன்றாவது இடத்தை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கேஷிகாவும் தக்கவைத்துக் கொண்டனர்.

கனடாவைச்  சேர்ந்த  கீதியா  நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

இலங்கையின் இசைத்துறையில் புரட்சியை ஏற்படுத்தி வந்த சக்தி சுப்பர் ஸ்டார் இம்முறை சர்வதேச ரீதியில் பிரம்மாண்டத்தின் உச்சத்தை எட்டியுள்ளது.

இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக சர்வதேசத்தில் உள்ள எமது குரலை தேடிச் சென்ற சக்தி க்ளோபல் சுப்பர் ஸ்டார் ரியாலிட்டி இசை நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி மிகப் பிரம்மாண்டமாக இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் இன்று நடைபெற்றது.

இலங்கை, அவுஸ்திரேலியா, கனடா, மலேஷியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் போட்டியிட்டனர்.

அவுஸ்திரேலியா, கனடா, மலேஷியா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தெரிவுப்போட்டிகளிலிருந்து ஒவ்வொரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி தலா ஐந்து போட்டியாளர்கள் வீதம் மொத்தம் 15 போட்டியாளர்கள் சர்வதேசத்திலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

இலங்கையில் நடந்த தெரிவுப்போட்டிகளிலிருந்து மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

அதன்படி, மொத்தமாக 20 போட்டியாளர்கள் இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் நடைபெற்ற ரியாலிட்டி இசை நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்தனர்.

அதிலிருந்து இறுதிப்போட்டிக்கு ஒவ்வொரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி தலா ஒருவர் வீதம் நான்கு பேர் தகுதிபெற்றனர்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரவீனா, அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கேஷிகா, கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தி கீதியா மற்றும் மலேஷியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஷாஷ்டன் ஆகியோர் பிரம்மாண்டமான இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.

சக்தி க்ளோபல் சுப்பர்ஸ் ஸடார் மகுடத்தைச் சூடிய வெற்றியாளருக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இரண்டாவது வெற்றியாளருக்கு 4000 அமெரிக்க டொலர்களும், மூன்றாம் இடத்தைப் பிடித்தவருக்கு 1500 அமெரிக்க டொலர்களும் நான்காம் இடத்தைப் பிடித்தவருக்கு 1000 அமெரிக்க டொலர்களும் வழங்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்