கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு

எழுத்தாளர் Bella Dalima

25 Jul, 2015 | 9:42 am

கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அவசர பராமரிப்புப் பணிகளுக்காக இன்று காலை 8 மணி தொடக்கம் நாளை அதிகாலை 5 மணி வரை சில பகுதிகளில் 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஹங்வெல்ல, களு அக்கல, மீபே, பாதுக்க, கொடகம, ஹோமாகம, கொட்டாவை, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலன்வத்த மற்றும் மத்தேகொட ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதனைத் தவிர கொழும்பு 8, 9 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை. அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக பாணந்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்