ஹெம்மாத்தகமயில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 29 பேர் காயம்

ஹெம்மாத்தகமயில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 29 பேர் காயம்

ஹெம்மாத்தகமயில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 29 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2015 | 11:29 am

ஹெம்மாத்தகம,திக்பிட்டிய பகுதியில் பஸ்சொன்று விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

இன்று (21) காலை 7 மணியளவில் தனியார் பஸ்சொன்று வயல் பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களின் 20 பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அரனாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்