குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு?

குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு?

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2015 | 9:28 pm

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலையில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த சந்திப்பின் போது, குச்சவெளி பிரதேச சபையின் தற்போதைய தவிசாளரான முபாரக், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி தம்முடன் இணைந்து கொண்டதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது;

[quote]நான் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவன். நான் இன்னும் அவ்வாறான தீர்மானமொன்றை எடுக்கவில்லை. சுயேட்சைக் குழுவொன்றில் எனது சகோதரர் இம்முறை போட்டியிடுகின்றார். அமீன் என்பவருடைய பிரச்சினை தொடர்பில் கதைக்கவே இந்த இடத்திற்கு வந்தேன். அண்ணாவின் தீர்மானத்திற்கு ஏற்பவே நான் இங்கு வந்தேன். பிரதேச மக்களின் தீர்மானத்தை எதிர்காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே அவர்கள் என்னை நியமித்தார்கள். [/quote]

என்றார் குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்