மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2015 | 1:23 pm

மன்னார் சிலாவத்துறை பகுதியில் சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

புத்தளம் மன்னார் பிரதான வீதியில் பயணித்த லொறி வீதியைவிட்டு விலகி இன்று (21) முற்பகல் எட்டு மணியளவில் விபத்திற்குள்ளானதாக அவர் கூறியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த 13 பேர் சிலாவத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் மூன்று ஆண்கள் உயிரிழந்ததாகவும்பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏனைய 10 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்