பெண்களுக்கு முன்னுரிமை: பிரஜைகள் முன்னணிக்கு சட்டபீட மாணவி பாராட்டு

பெண்களுக்கு முன்னுரிமை: பிரஜைகள் முன்னணிக்கு சட்டபீட மாணவி பாராட்டு

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2015 | 9:34 pm

பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பாராளுமன்றத்திற்கு பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கிய பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஜே.ஸ்ரீரங்காவின் செயற்பாட்டை பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வரவேற்கின்றனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டபீட மாணவி ராபிக் பைருஷா தெரிவித்ததாவது;

[quote]அதிகமான பெண்களை பாராளுமன்றத்தில் அங்கம்பெறச் செய்வதன் ஊடாக பெண்களின் உரிமைகளை தேசிய ரீதியாக மட்டுமன்றி, சர்வதேச ரீதியிலும் வென்றெடுக்க முடியும். ஆனால் இலங்கையிலுள்ள பிரதான கட்சிகள் கூட இவ்வாறான செயற்பாடுகளை செய்வது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. ஆனால், பிரஜைகள் முன்னணி கட்சியின் செயலாளர் ஸ்ரீரங்கா அவர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்வதானது சாலச்சிறந்ததாகவும் காணப்படுகின்றது. இவ்வாறான விடயங்களின் ஊடாக பெண்களின் உரிமைகளை பாராளுமன்றத்தில் பெண் அங்கத்தவர்கள் பெற்றுக்கொள்வது மிகவும் சிறந்தது. அதற்கான எடுத்துக்காட்டாகவே ஸ்ரீரங்கா அவர்களின் செயற்பாடானது காணப்படுகின்றது.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்