பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை நீதிமன்றத்தினால் கட்டுப்படுத்த முடியாது – மஹிந்த ராஜபக்ஸ

பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை நீதிமன்றத்தினால் கட்டுப்படுத்த முடியாது – மஹிந்த ராஜபக்ஸ

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2015 | 1:03 pm

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் காலியில் நேற்று (20) பொதுக் கூட்டமொன்று நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் காலி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக, காலி, வதுரம்ப பகுதியில் இந்த பொதுக் கூட்டம் நடைபெற்றது.

மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்த கருத்து..

[quote]பாராளுமன்றத்தில் சபாநாயகரே உயரிய தீர்மானங்களை எடுக்க வேண்டும்.பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை நீதிமன்றத்தினால் கட்டுப்படுத்த முடியும் என்ற தவறான எடுத்துக்காட்டு உருவாகியுள்ளது. நீதிமன்றம் மீயுயரானது அல்ல. பாராளுமன்றமே மீயுயர் தன்மையுடையது. மக்களே மீயுயரானவர்கள். இந்த நிலைமை மிகவும் அபாயகரமானது அதனால், நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்