நியூஸ்பெஸ்ட் கலையகத்தைப் பார்வையிட்ட சக்தி குலோபல் சுப்பர் ஸ்டார் போட்டியாளர்கள்

நியூஸ்பெஸ்ட் கலையகத்தைப் பார்வையிட்ட சக்தி குலோபல் சுப்பர் ஸ்டார் போட்டியாளர்கள்

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2015 | 9:31 pm

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் பலவித புதுமைகளைப் படைத்த சக்தி ரி.வி யின் மற்றுமொரு படைப்பான சக்தி குலோபல் சுப்பர் ஸ்டார் ரியாலிட்டி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது

இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் இந்தப் போட்டியை மிக பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த போட்டியில் பங்குபற்றும் போட்டியாளர்கள் இன்றைய தினம் நியூஸ்பெஸ்ட் கலையகத்தைப் பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தனர்.

அவுஸ்திரேலியா, கனடா, மலேஷியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட போட்டிகளிலிருந்து இறுதிச்சுற்றுக்கு நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மலேஷியாவைச் சேர்ந்த ஷாஷ்டன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கேஷிகா, கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கீதியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பிரவீனா ஆகியோர் மாபெரும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த நான்கு போட்டியாளர்களும் இன்று நியூஸ்பெஸ்ட் கலையகத்தைப் பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தனர்.

இவர்களுக்கு செய்தித் தயாரிப்பு, செய்தி ஔிபரப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில், ஊடகவியலாளர்களினால் தெளிவூட்டப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்