நாவலப்பிட்டி கற்குவாரியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஐவர் காயம்

நாவலப்பிட்டி கற்குவாரியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஐவர் காயம்

நாவலப்பிட்டி கற்குவாரியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஐவர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2015 | 4:56 pm

நாவலப்பிட்டியிலுள்ள கற்குவாரி ஒன்றில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

நாவலப்பிட்டி க்ரீன்வூட் பகுதியில் இன்று முற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

அனர்த்தத்தில் காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கற்குவாரியில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்களே அனர்த்தத்தின் போது காயமடைந்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்