தேர்தல் தொடர்பில் 234 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் தொடர்பில் 234 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் தொடர்பில் 234 முறைப்பாடுகள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2015 | 7:22 am

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 234 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.

சில மாவட்டங்களில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டமை குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பிரசார நடவடிக்கைகள் தொடர்பான 18 முறைப்பாடுகளும், அரச சொத்துக்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் 53 முறைப்பாடுகளும் பதிவானதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், நாட்டின் பல பகுதிகளிலும் மதுபானம் விநியோகிக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகளும் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பான பாரிய சம்பவங்கள் எதுவும் தமக்கு பதிவாகவில்லை எனவும் பெவ்ரெல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பட்டார்.

இதேவேளை, பொருட்கள் விநியோகிக்ப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் தமது அமைப்பிற்கும் பதிவாகியுள்ளதாக கெபே அமைப்பு தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், பொதுத் தேர்தல் தொடர்பில் 199 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ரசாங்க ஹரிஸ்சந்திர குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்