சிறுமி கூட்டு வன்புணர்வு: சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு உத்தரவு

சிறுமி கூட்டு வன்புணர்வு: சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2015 | 9:21 pm

மீட்டியாகொடை – பொல்ஹூன்னாவ பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான மூன்று சந்தேகநபர்களையும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை பலபிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 30ஆம் திகதி அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி சிறுமி வீட்டிலிருந்த சந்தர்ப்பத்தில், அவருடன் காதல் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் இளைஞனின் சகோரி அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த சிறுமி மாத்தறை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் நேற்றைய தினம் வெளிநாட்டிற்குத் தப்பிச்செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பலப்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் மேலும் இருவர், அம்பலங்கொட பிரதான பஸ் தரிப்பிடத்தில் கைது செய்யப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, மூவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணையும் மற்றுமொரு நபரையும் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்