சஜின் வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியலில்

சஜின் வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியலில்

சஜின் வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2015 | 1:12 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன மற்றும் ஜாதிக்க சவிய திட்டத்தின் புத்தளம் மாவட்ட ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் சுதத் அபேசிங்க ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 22 வாகனங்களை தவறான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இன்று (21) கோட்டை நீதவான் முன்னிலையில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சுவாசக் ​கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பிணை வழங்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் இன்று (21) வேண்டுகோள் விடுத்தனர்.

சட்டத்தரணிகளின் கோரிக்கையை நிராகரித்த நீதவான் சந்தேகபர்களை ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்