யூ-ரிப்போட் ஈகல் விருது வழங்கும் விழா அநுராதபுரத்தில் இடம்பெற்றது

யூ-ரிப்போட் ஈகல் விருது வழங்கும் விழா அநுராதபுரத்தில் இடம்பெற்றது

யூ-ரிப்போட் ஈகல் விருது வழங்கும் விழா அநுராதபுரத்தில் இடம்பெற்றது

எழுத்தாளர் Staff Writer

19 Jul, 2015 | 2:38 pm

வட மத்திய மாகாணத்திற்கான நியூஸ்பெஸ்ட்  யூ-ரிப்போட் செயலமர்வு இன்று காலை 9 மணிக்கு அநுராதபுரம் கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

இதன்போது சிறந்த யூ-ரிப்போட்டருக்கான விருது வழங்கப்பட்டது.

அந்தவகையில் பொலன்னறுவை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிரியந் ரத்நாயக்க, செனல் குமாரசிங்க, லயன்ஸ் டி சொய்சா ஆகியோரர் சிறந்து யூ- ரிப்போட்டர் விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டனர் செய்தி வழங்குனர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

இதேவேளை அநுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சந்திரகுமார தயாரத்ன, வசந்த பண்டார மற்றும் ஆனந்த விஜயசிறி ஆகியோரும் சிறந்து யூ-ரிப்போட் விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களிடையே பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த பிரியந்த ரத்நாயக்கவும் அநுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சந்திகுமார தயாரத்னவும் யூ-ரிப்போட் ஈகல் விருதினை தனதாக்கி கொண்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்