பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த மாணவியை 35 முறை கத்தியால் குத்திக்கொலை செய்த இளைஞர்கள் 

பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த மாணவியை 35 முறை கத்தியால் குத்திக்கொலை செய்த இளைஞர்கள் 

பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த மாணவியை 35 முறை கத்தியால் குத்திக்கொலை செய்த இளைஞர்கள் 

எழுத்தாளர் Bella Dalima

18 Jul, 2015 | 10:49 am

டெல்லியில் 19 வயது மாணவி இரண்டு இளைஞர்களால் 35 முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாணவி மீனாட்சி கடந்த வியாழன்று இரவு 7.30 மணிக்கு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த போது இரண்டு இளைஞர்கள் அவரை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதன்போது தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் மாணவி பயந்து ஓடியுள்ளார். அவரை விடாது துரத்திச் சென்ற இளைஞர்கள் 35 தடவைகள் கத்தியால் குத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து இரத்த வௌ்ளத்தில் கிடந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிர்பிழைக்கப் போராடிய மாணவிக்கு எவரும் உதவி செய்ய முன்வரவில்லை என்றும் மாணவியின் தாயார் மாத்திரம் இளைஞர்களைத் தடுக்க முயன்ற போதும் அவரையும் அவர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவியின் தாயார் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

தப்பிச்சென்றுள்ள இளைஞர்கள் குறித்து இந்த மாணவி கடந்த 2013ஆம் ஆண்டு பொலிஸாரிடம் தன்னை அவர்கள் கேலி செய்ததாக முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்போது பொலிஸார் சகோதரர்களான குறித்த இரண்டு இளைஞர்களையும் கைது செய்து விசாரித்துள்ளனர்.

அப்போதே இந்த இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இந்தக் கொடூரக்கொலை இடம்பெற்றிருக்காது என மாணவியின் உறவினர்கள் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்