தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 48 பேர் கைது

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 48 பேர் கைது

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 48 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

18 Jul, 2015 | 1:15 pm

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரை 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தேர்தல் சட்டம் மீறப்பட்டமை குறித்து 40 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்டமை, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதேவேளை, தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஐவர் ஹபராதூவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்