கிளிநொச்சியில் இளைஞர் கத்தியால் குத்திக்கொலை

கிளிநொச்சியில் இளைஞர் கத்தியால் குத்திக்கொலை

கிளிநொச்சியில் இளைஞர் கத்தியால் குத்திக்கொலை

எழுத்தாளர் Bella Dalima

18 Jul, 2015 | 5:00 pm

கிளிநொச்சி சாந்திபுரம் பகுதியில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வாகனம் ஒன்று தொடர்பில் எழுந்த வாக்குவாதம் முற்றியதால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் 28 வயதுடைய ராசலிங்கம் சாந்தரூபன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்