ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கில் கார்க்குண்டுத் தாக்குதல்: 100 பேர் பலி

ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கில் கார்க்குண்டுத் தாக்குதல்: 100 பேர் பலி

ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கில் கார்க்குண்டுத் தாக்குதல்: 100 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

18 Jul, 2015 | 11:23 am

ஈராக்கில் தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் நடத்திய கார்க்குண்டுத் தாக்குதலில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர், 50 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஈராக், டியாலா மாகாணத்தில் உள்ள கான் பெனிசாத் நகரின் மார்க்கெட் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரமழான் பண்டிகை நாளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கில் ரமழான் மாதம் தொடங்கியதுமே பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்