இஞ்சி இடுப்பழகிக்காக 20 கிலோ ஏற்றி இறக்கிய அனுஷ்கா!

இஞ்சி இடுப்பழகிக்காக 20 கிலோ ஏற்றி இறக்கிய அனுஷ்கா!

இஞ்சி இடுப்பழகிக்காக 20 கிலோ ஏற்றி இறக்கிய அனுஷ்கா!

எழுத்தாளர் Bella Dalima

18 Jul, 2015 | 2:39 pm

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக 20 கிலோ எடையை ஏற்றி இறக்கியுள்ளார் அனுஷ்கா.

பாகுபலி படத்தைத் தொடர்ந்து அனுஷ்காவின் பட வரிசை அதிகரித்து வருகிறது.

அவரது அடுத்த படம் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’.

இதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்ததைத் தொடர்ந்து திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இஞ்சி இடுப்பழகி’ படத்தின் கதையே எடைக்குறைப்பு பற்றியதுதான்.

இந்தப் படத்தில் அனுஷ்கா இரண்டு தோற்றங்களில் வருகிறார். இதற்காக அனுஷ்கா 20 கிலோ எடை கூடி, பின்னர் ஆர்யா கொடுத்த சில டிப்ஸ் மூலம் எடையை மீண்டும் குறைத்து வருகிறாராம்.

குண்டான அனுஷ்காவைப் பார்த்த பலரும், அனுஷ்காவுக்கு அக்காவா நீங்க என்று கேட்டார்களாம்.

ஆர்யா இந்தப் படத்தில் ஒரு உடற்பயிற்சி நிபுணராகத் தோன்றுகிறார். சமீபத்தில் ஸ்வீடன் நாட்டில் ஆர்யா பங்கேற்று வெற்றிபெற்ற சர்வதேச சைக்கிள் போட்டி பற்றிய காட்சிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனவாம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்