அதிமேதகு ஜனாதிபதியாக இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார் – அநுரகுமார

அதிமேதகு ஜனாதிபதியாக இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார் – அநுரகுமார

அதிமேதகு ஜனாதிபதியாக இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார் – அநுரகுமார

எழுத்தாளர் Bella Dalima

18 Jul, 2015 | 5:39 pm

கிரிபத்கொடையில் நேற்றைய தினம் (17) நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரக்கூட்டத்தில், அந்த கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் கம்பஹா மாவட்டத்திற்கான முதலாவது பிரசாரக்கூட்டம், பல கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது.

இதன்போது, இரண்டு வருடங்கள் இருக்கையில் மேலும் 7 வருடங்கள் ஆட்சிபுரியும் பேராசை காரணமாகவே மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலை நடத்தியதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

மேலும், அதிமேதகு ஜனாதிபதியாக இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவதாகவும் அவ்வாறே பாராளுமன்ற உறுப்பினரானாலும் அவருக்கு எதிரான ஊழல் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் குற்றவாளியாகக் கருதப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும் என அநுரகுமார குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்