பத்து மாவட்டங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் விநியோகம்

பத்து மாவட்டங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் விநியோகம்

பத்து மாவட்டங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் விநியோகம்

எழுத்தாளர் Staff Writer

16 Jul, 2015 | 8:23 am

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பத்து மாவட்டங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

ஏனைய மாவட்டங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை இன்று விநியோகிக்கவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிடுகின்றார்.

இந்த வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 1151 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின் மூலம் 196 மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்