ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது

ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது

ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2015 | 11:47 am

ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் பொரள்ளை மற்றும் காலி பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி துறைமுகம், மகுலுவ பகுதியில் 5 கிராம் 690 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள காலி மாகால்ல பகுதியை சேர்ந்த 22 வயதான சந்தேகநபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் இன்று (15) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஹெரோய்ன் வைத்திருந்த ஒருவர் பொரள்ளை சிறிசர உயன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரள்ளை பகுதியை சேர்ந்த 23 வயதான சந்தேகநபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்