மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கலந்துரையாடல்

மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கலந்துரையாடல்

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2015 | 9:04 pm

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கை குழுவினர், கொழும்பு – டார்லி வீதியிலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இன்று கூடினர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பொதுத்தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்