மத்திய மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை

மத்திய மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை

மத்திய மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2015 | 10:19 am

மத்திய மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளில் தொடர்ந்தும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் சிங்களம் மொழி மூல பாடசாலைகளிலும் இந்த பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஆசிரிய உதவியாளர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக மத்திய மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டாலும் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் உள்ளிட்ட சில பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவிவருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்