புளூட்டோவையும் நெருங்கிய நாசா

புளூட்டோவையும் நெருங்கிய நாசா

புளூட்டோவையும் நெருங்கிய நாசா

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2015 | 11:24 am

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் ஒன்றான புளூட்டோ மொத்தம் உள்ள 9 கிரகங்களிலும் மிகச்சிறியது.

சிறிய கிரகமான புளூட்டோவை ஆராய நாசாவால் நியூ கரிசான்ஸ் விண் கலம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பட்டது. அதை மேரிலாண்டில் உள்ள லாரல் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானிகள் வடிவமைத்து அனுப்பினர்.

அந்த விண்கலம் தற்போது புளூட்டோவில் இருந்து 2,500 கிமீ தொலைவில் இருந்தபடி நியூ கரிசான்ஸ் விண்கலத்தில் உள்ள லோர்ரி என்ற அதி நவீன டெலஸ்கோப் மூலம் போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

புளூட்டோவின் அளவை கணக்கிடுவது என்பது பல்வேறு காரணங்களினால் பெரிய சவாலாக அமைந்துள்ளது. ஆனால் தற்போது நாசா விண்வெளிக் ஆய்வுநிலையம் நியூ கரிசான்ஸ் விண்கலம் புளூட்டோ கிரகம் சுற்றளவில் 2,370கிமீ இருப்பதாக கண்டறிந்துள்ளது.

நியூ கரிசான்ஸ் விண்கலத்தில் உள்ள தொலைதூர ரிகனைசான்ஸ் இமேஜர் மூலம் புளூட்டோவின் அளவு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக புளூட்டோ சிறிய கிரகம் என்று கருதப்பட்டது. இப்போது நாசா விண்கலத்தின் இந்தக் கண்டுபிடிப்பு அந்தக் கணிப்பை முறியடித்துள்ளது.

“1930-ல் புளூட்டோவை கண்டுபிடித்ததிலிருந்து அதன் அளவு குறித்து விவாதங்கள் இருந்து வந்துள்ளன. இப்போது அந்த சவால் நிறைந்த கேள்விக்கு பதில் கண்டுபிடித்து முற்றுப் புள்ளி வைத்துள்ளோம்” என்று வாஷிங்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி பில் மெக்கினன் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய அளவு தெரியவந்துள்ளதையடுத்து புளூட்டோவின் அடர்த்தி முன்னைய கணிப்பை விட சற்றே குறைவாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதில் உள்ள பனியின் அளவு இன்னும் அதிகம் என்றும் கணிக்க முடிகிறது.

புளூட்டோவின் ட்ரோபோஸ்பியர் என்று அழைக்கப்படும் கீழடுக்கு எதிர்பார்த்ததைவிட திட்பக்குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

நெப்டியூன் சுற்றுப்பாதைக்கு அப்பால் உள்ள பொருட்களில் தற்போது புளூட்டோதான் பெரியது என்பது தெரியவந்துள்ளது.

9 ஆண்டுகள், 3 பில்லியன் மைல்கள் பயணத்துக்குப் பிறகு விண்கலம் நியூ கரிசான்ஸ் விண்கலமானது திட்டமிட்டபடி புளூட்டோ கிரகத்தின் மிக நெருக்கமான பகுதியை நேற்று மாலை இந்திய நேரப்படி 5.45 மணிக்கு அடைந்தது. தற்போது நியூ கரிசான்ஸ் விண்கலம் புளூட்டோ கிரகத்தின் மேற்பரப்பில் 7,800 மைல் தூரத்தை நெருங்கியுள்ளது.

அது புளூட்டோ கிரகத்தையும், இதன் துணை கோள்களையும் சுற்றி ஆய்வு செய்து தகவல்களை பூமிக்கு அனுப்பும். அதற்கு இன்னும் 13 மணி நேரங்களே உள்ளன. அதன் பிறகு தகவல் பரிமாற்றம் தொடங்கியதும் முழு மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர்.

புளூட்டோ கிரகத்தில் ஆய்வு நடத்த அமெரிக்கா தான் முதன் முறையாக விண்கலத்தை அனுப்பியுள்ளது. தற்போது அதன் முயற்சி வெற்றியும் பெற்றுள்ளது. இதற்காக விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்