பிறந்து 8 நாளே ஆன குழந்தையின் விரலை வெட்டி குப்பைத் தொட்டியில் போட்ட தாதி

பிறந்து 8 நாளே ஆன குழந்தையின் விரலை வெட்டி குப்பைத் தொட்டியில் போட்ட தாதி

பிறந்து 8 நாளே ஆன குழந்தையின் விரலை வெட்டி குப்பைத் தொட்டியில் போட்ட தாதி

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2015 | 3:55 pm

மேற்கு வங்கத்தில் பிறந்து 8 நாளே ஆன குழந்தையின் விரலை கவனக்குறைவாக வெட்டிய தாதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்திலுள்ள பலூர்கட் நகர மருத்துவமனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரம் பிறந்த குழந்தைக்கு வயிற்றுப்போக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு உப்புக் கலந்த சலைன் திரவம் செலுத்த, அக்குழந்தையின் இடதுகையில் கட்டுப் போடப்பட்டது.

சிகிச்சைக்குப் பின் குழந்தை உடல் நலம் தேறியதையடுத்து, கையில் போடப்பட்டிருந்த கட்டு அகற்றப்பட்டது.

அப்போது கவனக்குறைவாக செயற்பட்ட தாதி, குழந்தையின் விரலையும் தவறுதலாக வெட்டி குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார்.

மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக குறித்த தாதியைப் பணிநீக்கம் செய்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்