தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கவுள்ளது

தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கவுள்ளது

தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2015 | 12:42 pm

இலங்கையில் பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை இன்று ஆரம்பிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கை அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய தேர்தல் கண்காணிப்புப் பணிகள்
முன்னெடுக்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினர் கிறிடியன் ப்ரெடார் கண்காணிப்புக் குழுவிற்கு தலைமைதாங்கவுள்ளார்.

இலங்கை விடுத்த வெண்டுகோளுக்கு அமைய நல்லெண்ண அடிப்படையில் பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் இணைந்துக்கொள்வதாக வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமான ஃபெட்ரிக்கா மொகரினி கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்