தென்னாபிரிக்கா உடனான ஒருநாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்

தென்னாபிரிக்கா உடனான ஒருநாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்

தென்னாபிரிக்கா உடனான ஒருநாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2015 | 10:31 pm

துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் கலக்கிய பங்களாதேஷ் அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 எனும் கணக்கில் கைப்பற்றியது.

இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் இறுதிப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் களமிறங்கிய நிலையில் நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதனடிப்படையில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணியால் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழந்தது. மழையும் குறுக்கிடவே போட்டி 40 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

அணி சார்பில் டுமினி 51 ஓட்டங்களையும் மில்லர் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 40 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி9 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சார்பில் தமீம் இக்பால் மற்றும் சகார் ஜோடி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 154 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாகக் குவித்தனர். அதிரடியாக விளையாடிய சகார் 90 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

மேலும் தமீம் இக்பால் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள பங்களாதேஷ் அணி 26.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்து தொடரைக் கைப்பற்றியது.

இது தென்னாபிரிக்க அணிக்கு எதிராக பெறப்பட்ட முதல் தொடர் வெற்றியாகும். அத்துடன் பங்களாதேஷ் அணியினரால் சொந்த நாட்டில் வைத்துப் பெறப்பட்ட நான்காவது தொடர் வெற்றிஇது என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்