தலைவரின் அனுமதியின்றி ஶ்ரீ.சு.கட்சி மத்திய செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தமைக்கு தடையுத்தரவு

தலைவரின் அனுமதியின்றி ஶ்ரீ.சு.கட்சி மத்திய செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தமைக்கு தடையுத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2015 | 4:19 pm

கட்சித் தலைவரின் அனுமதியின்றி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தமைக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரசன்ன சோலங்க ஆரச்சியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்ததன் பின்னர் கொழும்பு மாவட்ட நீதவான் ஹர்ஷ சேதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாப்பின் பிரகாரம் கட்சித் தலைவரின் அனுமதியின்றி, கட்சியின் செயலாளரினால் விசேட மத்திய குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியாதென சோலங்க ஆராச்சி சார்பில் நீதிமன்றத்தில் பிரசன்னமாகிய சட்டத்தரணிகள் வாதிட்டதாக சட்டத்தரணி திஷ்ய வேரகொட குறிப்பிட்டார்.

சட்டத்தரணி லங்கா தர்மசிறியின் வழிகாட்டலின் கீழ் இரேஷ் செனவிரத்ன மற்றும் திஷ்ய வேரகொட ஆகிய சட்டத்தரணிகள், பிரசன்ன சோலங்க ஆராச்சி சார்பாக நீதிமன்றத்தில் விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்