ஜே.ஸ்ரீரங்காவின் நிதி ஒதுக்கீட்டில் மலையகத்தில் மற்றுமொரு கலாசார மண்டபம் திறந்து வைப்பு

ஜே.ஸ்ரீரங்காவின் நிதி ஒதுக்கீட்டில் மலையகத்தில் மற்றுமொரு கலாசார மண்டபம் திறந்து வைப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2015 | 6:33 pm

பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்காவின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு கலாசார மண்டபம் நேற்று முன்தினம் (13) திறந்து வைக்கப்பட்டது.

தலவாக்கலை சென்கூம்ஸ் தோட்டத்தில் இந்த கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

தமது வாழ்நாளில் தொடர்ந்து பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வரும் மலையக மக்களின் நலன்கருதி பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகத்தினால் பல பகுதிகளில் கலாசார மண்டபங்கள் அமைக்கப்பட்டு அவை மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.

அதன்படி, தலவாக்கலை – சென்கூம்ஸ் தோட்டத்தில் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகத்தினால் இந்த கலாசார மண்டபம் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதனைத் திறப்பதற்காக நேற்று அங்கு சென்ற ஜே.ஸ்ரீரங்காவிற்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

சென்கூம்ஸ் தோட்டத்திலுள்ள லூதர்மாதா தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு இடம்பெற்றதையடுத்து கலாசர மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.

சென்கூம்ஸ் கீழ்ப்பிரிவு மலையக மகளிர் மன்றத் தலைவி கணகநாயகி கலாசார மண்டபத்தைத் திறந்து வைத்தார்.

அதனையடுத்து மலையக மன்ற உறுப்பினர்களால் கலாசார மண்டபத்தின் பெயர்ப்பலகை
திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்