கிளிநொச்சியில் பிடிபட்ட சிறுவன் இராணுவ அதிகாரிக்கு கஞ்சா கொண்டு சென்றதாக தெரிவிப்பு

கிளிநொச்சியில் பிடிபட்ட சிறுவன் இராணுவ அதிகாரிக்கு கஞ்சா கொண்டு சென்றதாக தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2015 | 9:14 pm

கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் திருட முற்பட்ட சிறுவன், கஞ்சாப் பொதியுடன் பிடிபட்டு பிரதேச மக்களால் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

வீட்டின் கூரையைக் கழற்றி திருட உள்நுழைந்த வேளையிலே​யே வீட்டு உரிமையாளர்கள் மற்றும் பிரதேச மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளான்.

இராணுவ அதிகாரி ஒருவருக்காகவே கஞ்சாவைக் கொண்டு சென்றதாக சிறுவன் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளான்.

பிரதேச இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் வகையில் செயற்படும் இராணுவ அதிகாரியைக் கைது செய்யுமாறு பிரதேச மக்கள் பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுவனை அழைத்துச் செல்ல முற்பட்டபோது பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அங்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் கஞ்சாவை மீட்டு சிறுவனையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்