இரண்டாவது குழந்தைக்கு அனுமதி கேட்டு சீனப் பெண்கள் மனு

இரண்டாவது குழந்தைக்கு அனுமதி கேட்டு சீனப் பெண்கள் மனு

இரண்டாவது குழந்தைக்கு அனுமதி கேட்டு சீனப் பெண்கள் மனு

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2015 | 3:34 pm

மக்கட்தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் இருக்கும் சீனாவில், ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற சட்டம் இருப்பதால் 2 ஆவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாமா எனக்கேட்டு சுமார் 15 இலட்சம் பெண்கள் மனுக் கொடுத்துள்ளனர்.

ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற கட்டாயத் தடைச்சட்டத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு, தம்பதியரில் ஒருவர், தனியாகப் பிறந்திருந்தால், அரசிடம் மனுக்கொடுத்து 2 ஆவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தளர்த்தப்பட்டது.

இதையடுத்து, சுமார் 15 இலட்சம் பேர் சீன அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத்துறைக்கு 2 ஆவது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி கேட்டு மனு செய்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்