ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தச் சென்ற தயாசிறி ஜயசேகரவிற்கு மக்கள் எதிர்ப்பு

ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தச் சென்ற தயாசிறி ஜயசேகரவிற்கு மக்கள் எதிர்ப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2015 | 7:04 pm

ஆர்ப்பாட்டமொன்றைக் கட்டுப்படுத்துவதற்காகச் சென்றிருந்த வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு மக்கள் இன்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.

வீதி புனரமைக்கப்படாமையே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமைக்கான காரணமாகும்.

குருநாகல் – கட்டுபிட்டிய – இம்புல்கொட வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குருநாகல் – கண்டி பிரதான வீதியை மறித்து இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை பொலிஸாரினால் கட்டுப்படுத்த முடியாது போனது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் வீதியை புனரமைத்துத் தருவதாக எழுத்து மூலம் வாக்குறுதி வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

பின்னர், குறித்த இடத்திற்கு வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர சென்றிருந்தார்.

அவருக்கு மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்றிருந்த வடமேல் மாகாண வீதி அபிவிருத்திப் பணிப்பாளர் வீதியை புனரமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்