பம்பலப்பிட்டியில் ஆணும் பெண்ணும் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை

பம்பலப்பிட்டியில் ஆணும் பெண்ணும் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை

பம்பலப்பிட்டியில் ஆணும் பெண்ணும் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2015 | 8:04 am

கொழும்பு பம்பலப்பிட்டி அரச தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியருகே ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரும், 33 வயதான பெண் ஒருவரும் ஒருவயது குழந்தையுடன் ரயிலில் பாய்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த மூவரது சடலங்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

தவறான உறவினால் ஏற்பட்ட பிரச்சினையே இவர்களது தற்கொலைக்கு காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்