​கெடு முடிவதற்குள் சீர்திருத்தங்களை சமர்ப்பித்த கிரீஸ் யூரோ வலயத்தை தக்கவைக்குமா?

​கெடு முடிவதற்குள் சீர்திருத்தங்களை சமர்ப்பித்த கிரீஸ் யூரோ வலயத்தை தக்கவைக்குமா?

​கெடு முடிவதற்குள் சீர்திருத்தங்களை சமர்ப்பித்த கிரீஸ் யூரோ வலயத்தை தக்கவைக்குமா?

எழுத்தாளர் Bella Dalima

10 Jul, 2015 | 4:53 pm

கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் கிரீஸ், கடனாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையிலான பொருளாதார சீர்திருத்தங்களை முன்வைத்துள்ளது.

வியாழனன்று சீர்த்திருத்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு ஐரோப்பிய நாடுகள் கிரீஸை வற்புறுத்தியிருந்தன.

இந்நிலையில், கெடு முடிவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன்னரே பொருளாதார சீர்திருத்த முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளார் கிரீஸின் பிரதமர் அலெக்சீஸ் சிப்ராஸ்.

கிரீஸ் பிரதமர் அலெக்சீஸ் சிப்ராஸ் இடதுசாரி என்பதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் காழ்ப்புணர்விற்கு ஆளாகி வருகிறார்.

இந்த சீர்திருத்தங்களை அவர் சமர்ப்பித்து அதனை அந்த நாடுகள் ஏற்றுக்கொண்டால், 3 ஆவது பெரிய கடன் தொகை கிரீஸுக்கு வழங்கப்படும்.

இல்லயெனில், கிரீஸ் யூரோ வலயத்திலிருந்து வெளியேற்றப்படும். இதனால் அந்நாடு பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரும்.

எதிர்வரும் ஞாயிறன்று இடம்பெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகள், அதாவது யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் 19 நாடுகள் மட்டுமல்லாது பிற நாடுகளும் கூடும் கூட்டம் ஒன்றில் கிரீஸின் தலைவிதி தீர்மானிக்கப்படவுள்ளது.

கடன் வழங்கியவர்களான ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பிய மத்திய வங்கி, IMF உள்ளிட்டவைகளின் வலியுறுத்தல்களுக்கு ஏற்ப சில சீர்திருத்தங்களை தங்களது முன்மொழிவில் குறிப்பிட்டுள்ளது கிரீஸ்.

ஓய்வு பெறும் வயதை அதிகரித்தல், விற்பனை வரியை உயர்த்துதல், தனியார்மயத்தை விரைவில் மேற்கொள்ளுதல் ஆகியவற்றை முன்மொழிந்துள்ளது.

ஏற்கனவே 2 முறை கடன் வழங்கியதில் 240 பில்லியன் யூரோக்களைப் பெற்றது கிரீஸ், ஆனால் கடனைத் திரும்ப செலுத்த முடியாமல் திணறி வருகிறது.

இந்நிலையில், கிரீஸ் பணவிழுங்கி நாடாக உள்ளது என்று கூறி இனி உதவக்கூடாது என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளது ஜெர்மனி.

எனவே யூரோ மண்டலத்திலிருந்து கிரீஸை வெளியேற்றுவதும், ஐரோப்பிய யூனியனிலிருந்து கிரீஸை வெளியேற்றும் சாத்தியமும் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் கிரீஸ் யூரோ பயன்பாட்டை தக்க வைக்க முயல்கிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்