ஹட்டன் – கண்டி வீதியூடாக சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

ஹட்டன் – கண்டி வீதியூடாக சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

ஹட்டன் – கண்டி வீதியூடாக சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2015 | 12:41 pm

ஹட்டன் – கண்டி வீதியூடாக சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் இன்று (10) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

ஹட்டனிலிருந்து சேவையில் ஈடுபடும் பஸ்களின் சாரதிகளும் நடத்துனர்களும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

கண்டி பஸ் தரிப்பிடத்தில் நேர கண்காணிப்பாளருக்கும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்களுக்குமிடையில் நேற்று (10) முற்பகல் முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பஸ் சாரதி மற்றும் நடத்துனர்களிடம் அதிகாரிகள் 5000 ரூபா அபராதத்தை அறவிட்டுள்ளனர்.

பஸ் ஊழியர்களிடம் அபராதம் அறவிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (10) பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, அம்பாறை டிப்போ பஸ்கள் நேர அட்டவணைக்கு முரணாக சேவையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சேவையிலிருந்து விலகியுள்ளது.

இதற்கமைய, அம்பாறை பஸ் தரிப்பிடத்திலிருந்து குறுந்தூர மற்றும் தூர பிரதேசத்திற்கான பஸ் சேவைகள் இடம்பெறவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், அம்பாறை பிரதான பஸ் தரிப்பிடத்தில் பஸ் உரிமையாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்