வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயற்சித்தவர் கைது

வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயற்சித்தவர் கைது

வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயற்சித்தவர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2015 | 9:43 am

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை கடத்திச் செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 36 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

16,484 அமெரிக்க டொலர்கள் 39,500 சவூதி அரேபிய ரியால் மற்றும் 6 அவுஸ்திரேலிய டொலர்கள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கண்டி, தென்னக்கும்புர பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவரே வெளிநாட்டு நாணயங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு நாணயங்களை சிங்கப்பூருக்கு கொண்டுசெல்ல முற்பட்டதாக சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு சந்தேநபர் விமான நிலைய சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்