யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம்: 30 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம்: 30 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம்: 30 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Jul, 2015 | 7:37 pm

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 30 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்டிருந்த 8 பேர் நன்னடத்தை பிணைமுறியில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய 30 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். பதில் நீதவான் கதிரவேலு கேசவன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் 8 சந்தேகநபர்களும் தலா 5 இலட்சம் ரூபா நன்னடத்தை பிணை முறியில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட மேலதிக அறிக்கையில் குறித்த 8 சந்தேகநபர்கள் தொடர்பிலும் ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்தே, அவர்கள் நன்னடத்தை பிணை முறியில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று யாழ். கட்டடத் தொகுதி வளாகத்தில் பலத்த பாதுகாப்பு இடப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ். புங்குடுதீவில் வன்புணர்விற்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் 14 ஆம் திகதி காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் கட்டம் கட்டமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்