மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2015 | 9:26 am

டெங்கு நுளம்பு பரவும் பகுதிகளை அடையாளங் காண்பதற்காக மேல் மாகாணத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

23,420 பகுதிகள் இதன்போது சோதனைக்குட்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று முதல் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று மற்றும் நாளை மேல் மாகாணத்தின் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹசித்த திசேரா தெரிவித்துள்ளார்.

இதுவரை சோதனை செய்யப்பட்ட இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் சில இடங்கள்அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் 2 வீதமான பகுதியில் டெங்கு நுளம்புகள் காணப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர் ஹசித்த திசேரா தெரிவிக்கின்றார்.

முப்படையினர் , பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார சேவை ஊழியர்கள் டெங்கு ஒழிப்பு திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்