பொதுத்தேர்தல்: வடக்கு, கிழக்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வேட்புமனுத் தாக்கல்

பொதுத்தேர்தல்: வடக்கு, கிழக்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வேட்புமனுத் தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

10 Jul, 2015 | 9:14 pm

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில மாவட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்டத்திற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி யாழ். மாவட்டத்திற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தது.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி யாழ். மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தது.

யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு இரண்டு சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி மாவட்டத்திற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது.

ஈழமக்கள் ஜனநாயக் கட்சி வன்னி மாவட்டத்திற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பு மனுத் தாக்கல் செய்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஈழமக்கள் ஜனநாயக் கட்சி திருகோணமலை மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்