பொதுத்தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் வேட்புமனுத் தாக்கல்

பொதுத்தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் வேட்புமனுத் தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

10 Jul, 2015 | 9:36 pm

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சில மாவட்டங்களில் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பதுளை மாவட்டத்திற்கான வேட்புமனு, குழுத்தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் வழங்கப்பட்டது.

பதுளை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சியொன்று இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளதுடன், இரண்டு சுயேட்சைக்குழுக்கள் இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன

ஜனநாயகக் கட்சி இன்று ஹம்பாந்தோட்டையில் வேட்புமனு தாக்கல் செய்தது. குழுத்தலைவர் ரஞ்சித் கரநாயக்க தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேவேளை, கேகாலை மாவட்டத்திற்கான ஜனநாயகக் கட்சியின் வேட்புமனு, குழுத்தலைவர் ஜானகி அத்துகோரல தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது.

காலி மாவட்டத்திலும் ஜனநாயகக் கட்சி இன்று வேட்புமனு தாக்கல் செய்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் குழுத்தலைவர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் களுத்துறை மாவட்டத்திற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணி பொலன்னறுவை மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தது.

முன்னிலை சோசலிசக் கட்சி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை குழுத்தலைவர் புபுது ஜயகொட தாக்கல் செய்தார். மட்டக்களப்பு, அம்பாறை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் முன்னிலை சோசலிசக் கட்சி இன்று வேட்புமனு தாக்கல் செய்தது.

திருகோணமலை மாவட்டத்திற்கான ஜனசெத பெரமுனயின் வேட்புமனு கட்சியின் செயலாளர் பத்தரமுல்லே சீலரத்தன தேரரின் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களையும் ஜனசெத பெரமுன தாக்கல் செய்தது.

ஒக்கொம ரஜவரு ஒக்கொம வெசியோ கட்சி கண்டி மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்