பயனற்றுப் போன வடக்கின் வசந்தம்: குப்பி விளக்குகளோடு தொடரும் கல்வி

பயனற்றுப் போன வடக்கின் வசந்தம்: குப்பி விளக்குகளோடு தொடரும் கல்வி

எழுத்தாளர் Bella Dalima

10 Jul, 2015 | 9:26 pm

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட பகுதியை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வடக்கின் வசந்தம் வேலைத்திட்டங்கள் இதுவரை முற்றுப்பெறவில்லை.

மீளக்குடியமர்த்தப்பட்ட முல்லைத்தீவு மக்களுக்கு விரைவாக மின்சாரம் வழங்கும் நோக்கில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மின்சார இணைப்புக்கள் இதுவரை பூர்த்திசெய்யப்படவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்மாற்றிகள் நிறுவப்பட்டு மின் கம்பிகள் இழுக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை மின்சார இணைப்புக்கள் வழங்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மின்சாரம் கிடைக்கும் என்ற ஆவலுடன் கடன்பட்டு வீட்டிற்கான மின்னிணைப்புக்களை மேற்கொண்ட மக்களுக்கு இதுவரை ஏமாற்றமே எஞ்சியது.

மின்சாரம் இன்மையால் மாணவர்கள் குப்பி விளக்குகளில் கல்வியைத் தொடர்கின்றனர்.

யுத்தத்தின் வடுக்களை சுமந்தவாறு வாழும் இந்த மக்களுக்கு எப்போது மின்சாரம் கிடைக்கும்?

வடக்கின் அபிவிருத்தியினை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் மக்களுக்கான பூரண பயன்பாடு கிடைக்கவில்லை என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்