செல்ஃபி எடுக்க முயன்ற ரஷ்யப் பெண் 40 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு

செல்ஃபி எடுக்க முயன்ற ரஷ்யப் பெண் 40 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு

செல்ஃபி எடுக்க முயன்ற ரஷ்யப் பெண் 40 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Jul, 2015 | 3:56 pm

ரஷ்யாவில் பாலத்தின் மீது நின்று செல்ஃபி எடுக்க முயன்ற பெண் ஒருவர் தவறி வீழ்ந்து பலியானார்.

சுற்றுலாத்துறை பற்றிப் படித்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த அன்னா க்ருபெய்னிகோவா(21). அவர் தனது தோழி ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாட பிற தோழிகளுடன் மாஸ்கோ நகரைச் சுற்றிப் பார்க்கச் சென்றார்.

அப்போது அவர் பாலத்தின் ஓரத்தில் சாய்ந்தபடி செல்ஃபி எடுத்தார். செல்ஃபி எடுக்கையில் நிலைதடுமாறி 40 அடி உயர பாலத்தில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவில் இந்த ஆண்டில் மட்டும் செல்ஃபி எடுக்கையில் 10 பேர் பலியாகியுள்ளனர், 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

Pay-Selfie-death Pay-selfie-death1

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்