கார் உடல் மீது ஏறிய போதும் உயிர் பிழைத்த குழந்தை (Video)

கார் உடல் மீது ஏறிய போதும் உயிர் பிழைத்த குழந்தை (Video)

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2015 | 11:16 am

மகாராஷ்ரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் 3 வயது குழந்தை விளையாடியபடியே தனது வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று குழந்தை மீது மோதியது. இந்த விபத்தில் காரின் முன் சக்கரம் மற்றும் பின் சக்கரம் குழந்தை மீது ஏறி இறங்கி உள்ளது.இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் காரை நிறுத்தி குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்

குழந்தைக்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படாததால் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது தற்போது வெளியாகி உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்