கம்பளையில் புதையல் தோண்டிய நால்வர் கைது

கம்பளையில் புதையல் தோண்டிய நால்வர் கைது

கம்பளையில் புதையல் தோண்டிய நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2015 | 12:50 pm

கம்பளை – தெல்பிட்டிய பகுதியில் புதையல் தோண்டிய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவற்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை, சேருநுவர மற்றும் தெல்பிட்டிய பகுதிகைளைச் சேர்ந்த 23, 34, 43, 72 வயதுகளையுடையவர்களே புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபர்கள், கம்பளை நீதவான் முன்னிலையில் இன்று (10) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்