கடலுக்கடியில் பதுங்கியிருக்கும் பயங்கர வெப்பம்; அச்சத்தில் விஞ்ஞானிகள்

கடலுக்கடியில் பதுங்கியிருக்கும் பயங்கர வெப்பம்; அச்சத்தில் விஞ்ஞானிகள்

கடலுக்கடியில் பதுங்கியிருக்கும் பயங்கர வெப்பம்; அச்சத்தில் விஞ்ஞானிகள்

எழுத்தாளர் Bella Dalima

10 Jul, 2015 | 5:37 pm

கடலுக்கடியில் 300 முதல் 1000 அடி ஆழத்தில் மிக அதிக வெப்பம் மறைந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெப்பத்தின் அளவு எதிர்பார்த்ததை விட அதிகம் என அவர்கள் கருதுகின்றனர்.

கடலின் வெப்ப நிலை தற்போதுள்ளதை விட மிக அதிக அளவில் உயர்ந்திருக்கும் என்பதும் விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

உண்மையில், இந்த வெப்பத்தையும், பூமி வெப்பமயமாதலையும், பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் வீசும் சக்தி வாய்ந்த காற்று தடுப்பதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது அளவிடப்பட்டுள்ள உலக வெப்பமயமாதலின் வேகமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் நம்புகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளில் பூமியின் தரைப்பரப்பு வெப்பநிலையானது 0.05 டிகிரி சென்டிகிரேட் ஆக உயர்ந்துள்ளது.

கடலுக்கும், பூமிக்கும் இடையிலான வெப்பநிலை மாற்றத்திற்கான காரணம் குறித்த ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்