உமாஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் ஒரு மாதத்திற்குள் இழப்பீடு வழங்கத் தீர்மானம்

உமாஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் ஒரு மாதத்திற்குள் இழப்பீடு வழங்கத் தீர்மானம்

உமாஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் ஒரு மாதத்திற்குள் இழப்பீடு வழங்கத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2015 | 7:56 am

உமாஓயா திட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சகலருக்கும் ஒரு மாதத்திற்குள் இழப்பீடு வழங்கப்படும் என சுற்றாடல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தினால் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தொடர்ந்தும் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிடுகின்றார்.

மதிப்பீட்டுத் திணைக்களத்தின் மூன்று குழுக்கள் இந்த நடவடிக்ககைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

பாதிக்கப்பட்டுள்ள சகல குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்குரிய ஒதுக்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை உமாஓயா திட்டத்தின் சுரங்கத்தினுள் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை சீர்செய்யும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுற்றாடல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்