இன்றும் பல கட்சிகள் ​வேட்புமனுத்  தாக்கல்

இன்றும் பல கட்சிகள் ​வேட்புமனுத் தாக்கல்

இன்றும் பல கட்சிகள் ​வேட்புமனுத் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2015 | 1:15 pm

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் தயார் செய்யும் பணிகள் நிறைவு பெற்று வருகின்றன.

சுதந்திர கூட்டமைப்பு பெரும்பாலான மாவட்டங்களில் இன்று (10) வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

பதுளை மாவட்டத்திற்கான வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்று (10) தாக்கல் செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

குறித்த வேட்பு மனு பட்டியலில் டிலான் பெரேராவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை எனவும், அவர் தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இன்று (10) பல மாவட்டங்களிலும் தத்தமது கட்சிசார் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

முன்னிலை சோசலிச கட்சி திகாமடுல்ல தேர்தல் தொகுதிக்கான வேட்புமனுவை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (10) கையளித்துள்ளது.

ஜனசெத முன்னணியின் திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பு மனுவை, மாவட்ட செயலகத்தில் கட்சி தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் இன்று (10) கையளித்தார்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்